வாக்காளர் அறிவூட்டல் என்பது பரந்துபட்டளவில் விரிவாக்கம் பெற்றுள்ளதுடன், மதிநுட்பம் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதில் மிகவும் முக்கியமான கருப்பொருளாகவும் அமைகின்றது. வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன் கொண்ட பிரஜைகள் எனும் அளவுகோலைப் பயன்படுத்தி உயரிய எழுத்தறிவு கொண்ட சமூகம் இருப்பதாக கூறும் சந்தர்ப்பங்களை நாங்கள் கேட்டிருந்தாலும், அது மதிநுட்பம் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துகின்றது என சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாடசாலைக் கல்வியில் மேலதிக சித்தாந்த ரீதியான விடயங்களைக் கலந்துரையாடினாலும் அவற்றை நடைமுறை ரீதியாக விருத்தியடையச் செய்வதற்கு அதிக விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கும் போது தூரநோக்குக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் கூடிய, மக்களை வழிகாட்டும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்நாட்டின் தலைவிதி மிகவும் கவலைக்குரியதாக மாறிவிடும். வாக்காளர் கல்வியைப் பெற்றுக் கொடுத்து வாக்காளர்களுக்குப் பதிலாக முன்னேற்றகரமான மனப்பாங்குடன் கூடிய மதிநுட்பம் வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.