ஃபவ்ரல் அமைப்புக்கும் கொமியூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல்
ஃபவ்ரல் அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடரில் முதலாவதாக இன்று (02) ஆம் திகதி கொழும்பு இல் அமைந்துள்ள கொமியூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் தேர்தல் முறைமையின் திருத்தத்திற்கான பாராளுமன்ற செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கும் ஃபவ்ரல் அமைப்பின் முன்மொழிவுகளைத் தயாரிக்கும் பயணம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட நூல் கொமியூனிஸ்ட் கட்சிக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், புதிய தேர்தல் முறைமையில் பிரதிநிதித்துவ முறை உருவாக்கப்பட வேண்டிய விதம், இளைஞர் பிரதிநிதித்துவம் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியதன் தேவை, நாட்டிலும் நாட்டிற்கு வெளியேயுள்ளவர்களின்; வாக்குரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான முறைசார் பொறிமுறையொன்றை தயாரித்தல், தேர்தல் செயன்முறையில் சமதளத்தை உருவாக்கல் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேபோல் சொத்துக்கள் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்தை இற்றைப்படுத்தல், அரசியல்வாதிக்கும்; பிரஜைக்கும் இடையிலான தொடர்பு போன்ற விடயங்கள் பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின்; உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து கடந்தகாலத்தில்; மொனராகல மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புத் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அதில் ஃபவ்ரல் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துரையாடலில் கலந்து கொண்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரோஹன ஹெட்டியாராச்சி அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது, முற்காலத்திலிருந்து ஆட்சி அதிகாரத்திலுள்ள அரசியல் கட்சிகள் தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக அரசியலமைப்பை மாற்றியமைத்துள்ளமையை குறிப்பிட்டுக் கூறினார். மேலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் மலர்ந்துள்ளதெனவும் கூறினார்.
அக்கலந்துரையாடலில் கொமியூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதாவது, தேர்;தல் முறைமையின் திருத்தம் தொடர்பாக ஃபவ்ரல் அமைப்புக் கொண்டுள்ள எண்ணக்கருத்துக்கும் தமது எண்ணக்கருத்துக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையெனவும் கூறினர். அதேபோல் தமது கட்சி எப்போதும் அரசியல் கலாச்சார மேம்பாட்டுக்காக தொடர்ந்து வெளிப்படையாகச் செயற்படுகின்றதெனவும் கூறினர்.
இக்கலந்துரையாடலில் கொமியூனிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதம செயலாளர் ஜீ.வீரசிங்க, முன்னாள் அமைச்சர் டீ.யூ. குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, பிரதி பிரதான செயலாளர் எஸ்.
சுதசிங்க, உப அமைப்பாளர் வில்.ப்ரட் ஜயசிங்க, ஏற்பாட்டு செயலாளர் செனீ விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளதுடன், ஃபவ்ரல் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பொருளாளர் க்றிஸ்டோபல் சவரிமுத்து மற்றும் உப தலைவர் கே.என். டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.