ஃபவ்ரல் அமைப்புக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல்
அரசியல் கட்சிகளுடன் ஃபவ்ரல் அமைப்பு மேற்கொள்ளும் கலந்துரையாடல் தொடரின் இரண்டாவது கலந்துரையாடல் இன்று (10) ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தேர்தல் முறைமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் தேர்தல் முறைமையின் திருத்தத்திற்காக பாராளுமன்ற செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் ஃபவ்ரல் அமைப்பின்
முன்மொழிவுகளைத் தயாரிக்கும் வழிமுறைகள் தொடர்பாக உருவாக்கியுள்ள நூல் மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.அதன்போது கருத்துத் தெரிவித்த நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரோஹன ஹெட்டியாராச்சி அவர்கள் புதிய தேர்தல் முறைமையைத் தயாரிக்கும் போது அனைத்துக் கட்சிகளுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமெனச் சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோல் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பாகவும் விரிவான சமூகக் உரையாடலை உருவாக்கப்படல் வேண்டுமெனவும் ஹெட்டியாராச்சி அவர்கள் மேலும் தெரிவித்தார். அதேபோல் பெண்கள் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்காக ஃபவ்ரல் அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “மாற்றத்திற்கான பாதை” நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகவும் ஹெட்டியாராச்சி அவர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் எடுத்துக் கூறியதாவது, புதிய தேர்தல் முறைமையைத் தயாரிக்கும் போது பொதுக்களின் விருப்புக்கள்
நியாயமான முறையில் பிரதிநிதித்துவம் வகிக்கப்படல் வேண்டும் என்றார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ளும் போதும், பாராளுமன்ற செயற்குழு தேர்தல் முறைமையை தயாரிக்கும் போதும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய கோட்பாடுகள் தொடர்பாகவும் தாம் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாகக் கூறினார்.
அதேபோல் மாகாண சபை முறைமை தொடர்பாக தமது கட்சி விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும், அரசியலமைப்பின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமெனவும், கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார அழுத்தங்கள் காரணமாக ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுமக்கள் தொடர்பாக தேர்தல் நடாத்தும் போது மிகவும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் திரு. ரில்வின் சில்வா அவர்கள் தெரிவித்தார். மேலும் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை பிற்போடும் என்ற சந்தேகம் தற்போது அனைவரிடமும் மேலெழுந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
அதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த திரு. ரில்வின் சில்வா அவர்கள் ஃபவ்ரல் அமைப்புக்கு முன்மொழிந்ததாவது, பிரஜைகள் தமது வாக்களிப்பின் போது கவனிக்க வேண்டிய முன்னுரிமைகள் தொடர்பாகவும் பொதுமக்களிடையே உரையாடலொன்றை ஏற்படுத்த வேண்டுமென்றார்.
அதற்கான சந்தர்ப்பம் ஃபவ்ரல் அமைப்புக்கு இருப்பதாகவும் அவ்வாறான உரையாடல்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் பங்காற்றும் எனவும் சுட்டிக்காட்டிய ரில்வின் சில்வா அவர்கள், கூடுதலானவர்கள் சமகால ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரத்திற்கு இரையாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுக் கூறினார்.
மேலும் மோசடியான அரசியலில் இருந்து விடுபட்டு பொதுமக்களின் நலன்சார்ந்த அரசியலாக மாற்றிமைக்க வேண்டுமெனவும், அரசியல்வாதிகளின் ஓய்வூதியம், வாகன அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்புரிமைகளையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதை தொடக்க முயற்சியாக மேற்கொள்ளலாம் எனவும் திரு. ரில்வின் சில்வா அவர்கள் சுட்டிக்காட்னார்.
இக்கலந்துரையாடலில் ஃபவ்ரல் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ரோஹன ஹெட்டியாராச்சி அவர்கள், உபதலைவர் திரு. டீன் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுஜீவ கயனாத் அவர்களும், மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் மற்றும் சட்டத்தரணி சுனில் வட்டகொட ஆகியோர் கலந்து கொண்டனர்.