புதிய தேர்தல் முறைக்காக ஃபவ்ரல் அமைப்பு தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்
ஃபவ்ரல் அமைப்பு இலங்கையின் தேர்தல் முறைமை திருத்தத்திற்கான பாராளுமன்ற செயற்குழுவிடம் தமது முன்மொழிவுகளை நேற்று (14) ஆம் திகதி சமர்ப்பித்தது.
ஃபவ்ரல் அமைப்பு தமது முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கு முன்னராக அரசியல் கட்சிகள், பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள், பிரஜைகள் குழுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் நாடளாவிய ரீதியில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த கலந்துரையாடல்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை தமது முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது கருத்திலெடுத்துள்ளது.
தேர்தல் முறைமை, வேட்பாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்தல், பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல், சொத்துக்கள் பொறுப்புக்கள் பிரகடனம், தேசிய பட்டியலில் வேட்பாளர்களைத் தெரிவு செய்தல், அரசியல் கட்சிகளைப் பதிவு செய்தல், அனைத்து வாக்காளர்களின் வாக்குரிமைப் பாதுகாத்தல், மக்கள் பிரதிநிதிகளின் கட்சி மாற்றம், பிரஜைகளின் பணிப்பொறுப்புக்கள், உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யக்கூடிய
சந்தரப்பங்கள் அதேபோல் எல்லை நிர்ணயம் உள்ளிட்ட பல துறைசார் விடயங்களில் ஃபவ்ரல் அமைப்பு தமது முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது கவனம் செலுத்தியுள்ளது.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட தேர்தல்கள் மற்றும் தேர்தல் நடாத்தப்படும் கட்டமைப்புக்களின் சட்ட ஒழுங்குகளில் மறுசீரமைப்புக்களை அடையாளங் காண்பதற்கும், அதுதொடர்பாக தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற வி ட செயற்குழுவில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் விமல் வீரவங்க, அமைச்சர் எம்.யூ.எம். அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஆர். ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாகர
காரியவசம் ஆகியோல் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
ஃபவ்ரல் அமைப்பு தமது முன்மொழிவுகள் பற்றி செயற்குழு முன்னிலையில்; கருத்துத் தெரிவித்துள்ளதுடன், செயற்குழுவில் ஃபவ்ரல் அமைப்பின் முன்மொழிவுகள் பற்றி ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது.
இம்முன்மொழிகளைச் சமர்ப்பிக்கும் போது, ஃபவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி அவர்களுடன், பணிப்பாளர் சபையின் அங்கத்தவர்களான கலாநிதி ஜெஹான் பெரேரா, க்றிஸ்டோபல் சவரிமுத்து, கே.என்.டீன் ஆகியோரும், நிர்வாக அலுவலர் இந்திக ஜீ வன்தர, சிரேஷ்ட வேலைத்திட்ட அலுவலர் உபேக்ஷி பர்னாந், சட்ட ஒருங்கிணைப்பாளர் இசுறு கரவிட்ட போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இச்செயற்குழுவானது முன்மொழிவுகளை பொறுப்பேற்றலை இன்று (15) ஆம் திகதியுடன் முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.