வாக்காளராகப் பதிவு செய்வதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு நபரும் வாக்காளர் இடாப்பில் தத்தமது பெயரை உட்சேர்த்துக்கொள்ள முடியும். தேருநர்; இடாப்பில் வாக்காளர் ஒருவராகப் பதிவு செய்து கொண்டவர்கள் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதற்கும் மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் வாக்களிப்பதற்கும் தகைமையுடையவர்களாவர். மக்கள் இறையாண்மையின் கீழ் அனைத்துப் பிரஜைகளுக்கும் வாக்குரிமை உரித்தானாலும், தேருநர் இடாப்பில் குறித்த நபரின் பெயர் உட்சேர்;க்கப்பட்டிருந்தால் மாத்திரமே வாக்களிக்க முடியும்.
இதற்கு முன்னய வருடங்களில் வாக்காளர் இடாப்பு மீளாய்வுச் செயன்முறை யூன் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், 2022 ஆம் ஆண்டு தொடக்கம் வாக்காளர் இடாப்பு மீளாய்வு செயன்முறை பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.