பஃவ்ரல் தொடர்பாக

பவ்ரல் அமைப்பு 1987 ஆம் ஆண்டில் தேசிய ரீதியான பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு இலாபம் ஈட்டாத அமைப்பாக ஆரம்பத்தில் 1982 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மீண்டும் 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீளப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் மீறப்படுவதால் ஏற்பட்ட பாதிப்புக்களால், தேர்தல்களின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பதற்கு சிவில் சமூக அமைப்புக்களின் தலையீடுகள் அவசியமென்பதை உணரப்பட்ட வேளையில் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், தேர்தலின் பின்னரும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பொதுமக்களின் முயற்சிகளை ஊக்குவிப்பதே பவ்ரல் அமைப்பை உருவாக்குவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அமைந்தது. பவ்ரல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அதிகளவான சிவில் சமூக அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் உள்ளுராட்சி மன்றத் தேர்தல், மாகாண சபை தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் என நாட்டில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களையும் கண்காணித்து வருகின்றது. அது பல வருடகாலமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வாக்காளர்களின் வாக்குரிமைகள், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி போன்ற துறைகளில் பரிந்துரைத்து வாதிடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தியுள்ளது. அதேபோன்று பவ்ரல் அமைப்பு தமது அனைத்து செயற்பாடுகளின் போதும் உண்மையான நடுநிலைத்தன்மையைப் பேணி வருகின்றது.

Image
Image

தொலைநோக்கும் பணிக்கூற்றும்

பார்வை

“ஜனநாயகப் பெறுமதிகளை ஆதரிக்கின்றதும், ஆட்சித்துறையின் பொறுப்புக் கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலான அரசியல் அறிவுபடைத்த, அதிகார உரிமை கொண்ட பிரஜைகளுடன் ஜனநாயகத்தைப் பேணிவளர்க்கும் தேசம்”

பணிக்கூற்று

“மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட பிரஜைகளின் முனைப்பான பங்கேற்பின் மூலம் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதும், அனைவரையும் உள்ளடக்கியதான சுதந்திரமானதும்; நீதியானதுமான தேர்தல்களை ஊக்குவிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், நல்லாட்சியை நிலைநாட்டுவதற்கும் தகுந்த ஆற்றல்மிக்க சிவில் சமூகத்தைக் கட்டியெழுப்புதல்”

நோக்கங்கள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடக்கம் மாகாணசபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் வரைக்கும் தவறுகளற்ற தேர்தல் செயன்முறையை உறுதிப்படுத்துவதற்காக மக்களை தலைமைதாங்கி நடாத்தும் இடைவிடாத தேர்தல் கண்காணிப்புக்கான அணிதிரட்டல்
தேர்தல்களின் போது இடம்பெறும் அனைத்துவித வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான சம்பவங்களை அறிக்கைப்படுத்தல் மற்றும் ஆவணப்படுத்தல்
அனைத்து மட்டங்களிலான பரிந்துரைத்து வாதிடல் மற்றும் செயற்பாடுகள் மூலம் பெண்களுடைய அரசியலில் பங்கேற்பினை வலியுறுத்துதல்
பொதுக் கூட்டங்களில் அர்த்தமுள்ளதும் பகுப்பாய்வுடன் கூடியதுமான விவாதங்களை ஊக்குவிப்பதன் மூலம் மதிப்பைப் பேணிப்பாதுகாப்பதற்கு ஒத்துழைத்தல்
மக்களின் அரசியல் உணர்வுகளை சமூகத்திலிருந்து கட்சி அரசியல் மற்றும் தேசிய மட்டங்களுக்கு பரிமாற்றுவதன் மூலம் ஜனநாயக விழுமியங்களை மக்கள்மயப்படுத்தல்
கிராமம் தொடக்கம் பிரதேச செயலகப் பிரிவு, மாவட்டம், மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்கள், குழுக்கள் மற்றும் வலையமைப்புக்களுடன் ஒத்துழைப்புடனும் வலையமைப்பாகவும் இயங்குதல்
அமைப்பின் நிலைபேற்றுத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக பலநோக்கு தொண்டர் வளவாளர்களைக் கட்டியெழுப்புதல்
தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின்னரும் வன்முறைகளையும் முறைகேடுகளையும் தடுப்பதற்காக கூட்டான சமூகத் தொடக்க முயற்சிகளை ஊக்குவித்தல்
தேர்தல்கள் தொடர்பாகக் காணப்படுகின்ற சட்டங்கள், ஒழுங்குவிதிகள், நடைமுறைகள் மற்றும் செயன்முறைகளை மீளாய்வு செய்தல் மற்றும் சட்டம் மற்றும் பிரயோகங்களை சரியான வகையில் மாற்றுவதற்கான முன்மொழிவுகளைத் தயாரித்தல்
ஜனநாயகப் பெறுமதிகள் மற்றும் நல்லாட்சிக் கோட்பாடுகளை மேம்படுத்தும் முயற்சிகளுடன் கூடிய புதிய அரசியல்வாதிகளைக் கொண்ட தலைமுறையை பேணிவளர்ப்பதற்கு ஒத்துழைத்தல்
பொறுப்புடனும், மனச்சாட்சியுடனும் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் அரசியல் அறிவை அதிகரித்தல்
ஜனநாயக கலாச்சாரத்தைப் பேணிவளர்ப்பதற்கு மற்றும் அரசியல் கட்சி மட்டத்தில் ஜனநாயகப் பெறுமதிகள் மற்றும் நல்லாட்சிக் கோட்பாடுகளை ஊக்குவிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் அரசியல் கட்சிகளை தூண்டுவித்தல்
அமைப்பின் நோக்கங்களை அடைவதற்காக அரச நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல்

இயக்குனர் குழுமம்

ஜெஸ்மினா இஸ்மாயில்
ஜெஸ்மினா இஸ்மாயில் தவிசாளர்
விசாகா தர்மதாஸ
விசாகா தர்மதாஸ துணை தவிசாளர்
ஜெஹான் குணாதிலக்க
ஜெஹான் குணாதிலக்க இயக்குனர்
பேராசிரியர். ஷிரந்த ஹீன்கெந்த
பேராசிரியர். ஷிரந்த ஹீன்கெந்த இயக்குனர்
கலாநிதி. ஜெஹான் பெரேரா
கலாநிதி. ஜெஹான் பெரேரா பொது செயலாளர்
முஹம்மத் தீன்
முஹம்மத் தீன்துணை தவிசாளர்
கலாநிதி. வின்யா ஆரியரத்ன
கலாநிதி. வின்யா ஆரியரத்ன இயக்குனர்
தந்தை ரொஹான் சில்வா
தந்தை ரொஹான் சில்வாஇயக்குனர்
கிறிஸ்டோபல் சவரிமுத்து
கிறிஸ்டோபல் சவரிமுத்து பொருளாளர்
எத்கடவள சத்தஜீவா தேரர்
எத்கடவள சத்தஜீவா தேரர் இயக்குனர்
ஹேமந்த விதானகே
ஹேமந்த விதானகே இயக்குனர்

செயலகம்

ரோஹன ஹெட்டியாராச்சி
ரோஹன ஹெட்டியாராச்சி நிறைவேற்று பணிப்பாளர்
சுஜீவ கயநாத்
சுஜீவ கயநாத்தேசிய இணைப்பாளர்
சுஜீவா பிரியதர்ஷனி
சுஜீவா பிரியதர்ஷனி திட்ட அதிகாரி
ஹர்ஷி வீரகோன்
ஹர்ஷி வீரகோன்கணக்கு உதவியாளர்
இசுறு கரவிட்ட
இசுறு கரவிட்டசட்ட அதிகாரி
சத்தியராஜ்
சத்தியராஜ்சிரேஷ்ட திட்ட அதிகாரி
சூலணி நவரத்ன
சூலணி நவரத்ன திட்ட அதிகாரி
பிரேமசிறி
பிரேமசிறி சாரதி
இஸ்ஸத் இன்ஹாம்
இஸ்ஸத் இன்ஹாம்திட்ட அதிகாரி
வசந்த கோமஸ்
வசந்த கோமஸ் உதவி பணிப்பாளர்
உபேக்க்ஷி பெர்னாண்டோ
உபேக்க்ஷி பெர்னாண்டோ திட்ட முகமையாளர்
குஷானி அபேயசேகர
குஷானி அபேயசேகரவரவேற்பாளர்
புன்சரா ரத்னவீர
புன்சரா ரத்னவீரஉதவி கணக்காளர்
ஜிஹான்  விக்ரமசிங்க
ஜிஹான் விக்ரமசிங்க சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்
இந்துவர அர்தநாயக்க
இந்துவர அர்தநாயக்க சிரேஷ்ட திட்ட அதிகாரி
பிரமுக்க்ஷி பெர்னாண்டோ
பிரமுக்க்ஷி பெர்னாண்டோ நிர்வாக உதவியாளர்
ஹிரந்த இசுரங்க
ஹிரந்த இசுரங்க தகவல் தொழில்நுட்பம் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்
வீரன் காளியம்மா
வீரன் காளியம்மாஅலுவலக உதவியாளர்
இந்திக்க ஜீவண்தர
இந்திக்க ஜீவண்தர நிதி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்
இநோகா பிரியதர்ஷனி
இநோகா பிரியதர்ஷனி கணக்காளர்
நந்தனி ஜயலத்
நந்தனி ஜயலத்செயலாளர் / மொழியியல் ஒருங்கிணைப்பாளர்
நிமேஷா தி சில்வா
நிமேஷா தி சில்வாதிட்ட உதவியாளர்
நிலுக பெரேரா
நிலுக பெரேராகிராஃபிக் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர்
அசங்க சேனாதீர
அசங்க சேனாதீரசிரேஷ்ட திட்ட அதிகாரி
மிரால் அயேஷ்மந்த
மிரால் அயேஷ்மந்த திட்ட உதவியாளர்
தாருகா சந்தமினி
தாருகா சந்தமினி கணக்கு உதவியாளர்
மதுபாஷிணி
மதுபாஷிணிகணக்கு உதவியாளர்
Image

Become a Member

Raised by campaign contributions

Please insert your API key for mailchimp.

Quick links

Image
Riding towards global success with a 100% teammate enthusiasm

Address

No.16, Byrde Place,Off Pamankada Rd, Colombo 00600

Terms & Conditions

© 2022 People’s Action for Free and Fair Elections (Paffrel)

Design by Vishmitha.com