இளைஞர் யுவதிகளுக்காக ஃபவ்ரல் இன் பாடநெறியொன்று
பொறுப்புக்களுடன் கூடிய அறிவுபூர்வமான இளைஞர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஃபவ்ரல் அமைப்பால் உருவாக்கப்பட்ட பாடநெறியொன்று கடந்த நாளில் ஆரம்பிக்கப்பட்டது.
சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடாத்தப்படும் ஆறுமாதகால பயிலமர்வான இப்பாடநெறிக்காக நாடளாவிய ரீதியில் 200 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றாடம் தமது வாழ்வுக்கு அவசியமான சட்டம் ஒழுங்குகள் தொடர்பாக அவர்களைப் பயிற்றுவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட ஒழுங்குகள் மற்றும் பொறிமுறைகள், வாக்காளர் இடாப்பு மீளாய்வு, மனித உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு, இலஞ்ச ஊழல் தடுப்புக்கான சட்ட ஒழுங்குகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக விரிவான அறிவை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் பெற்றுக்கொண்ட அறிவைப் பயன்படுத்தி, நெருக்கடிகளுடன் கூடிய சமூக நிலைமைகளில் நடைமுறை ரீதியாகப் பிரயோகிப்பதற்கு உந்துவிப்பதும் இப்பாடநெறியின் நோக்கமாகும்.
இப்பாடநெறிக்காக அனுபவம் வாய்ந்த வளவாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதுடன், பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூலமான முதலாவது செயலமர்வின் வளவாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் திரு. எம்.எம்.முகமட் அவர்களின் தலைமையில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான ஃப்ரான்ரிக்லீன் டீ ரூஸ்வேல்ட் அவர்கள் ஒருமுறை கூறியதாவது, எமக்கு எப்போதும் எமது இளைஞர் பரம்பரையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஆனாலும், எதிர்காலத்திற்காக எமது இளைஞர் பரம்பரையை கட்டியெழுப்ப முடியும் எனக் கூறியுள்ளார்.